News

இடிக்கப்பட்ட விஷ்ணு சிலை! வலுக்கும் தாய்லாந்து – கம்போடியா எல்லை பிரச்னை

கம்போடியாவுடனான எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து இராணுவ வீரர்கள் கம்போடியா பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியமையானது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

கம்போடியாவின் பிரேவ் விஹார் பகுதியில் விஷ்ணு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2013ல் தனது பிரதேசமாக தாய்லாந்து கருதும் இந்த இடத்தில் கம்போடிய இராணுவம் 29 அடி உயரத்தில் சிலையை நிறுவியது.

இந்நிலையில் இரு நாடுகளும் புத்த மதத்தை பின்பற்றினாலும் புத்தரின் அவதாரமாக ஹிந்து கடவுள் விஷ்ணுவைக் கருதுகின்றனர்.

இது தொடர்பான வழக்கில், 1962ல் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் இந்த சிலை உள்ள பகுதியை கம்போடியாவுக்கு சொந்தமானதாக அறிவித்தது.

எனினும் இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில், 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து இராணுவத்தினர் தற்போது இடித்து அகற்றியுள்ளனர். இதனால் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top