சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அனர்த்த நிலை காரணமாக, 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.
இன்று மாலை வெளியிட்ட இறுதி அறிக்கையின் படி இந்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குறித்த அறிக்கையின் படி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,68,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நாடு முழுவதும் 1,094 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 1,47,931 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் அதிகாரிகளால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
