Canada

உக்ரைனுக்கு மில்லியன் டொலர் உதவி: கனடா அறிவிப்பு

உக்ரைனுக்கு 235 மில்லியன் டொலர் உதவிகள் வழங்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

பெல்ஜியத்தின் பிரஸெல்ஸில் நடைபெற்ற நேடோ வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அமெரிக்காவில் இருந்து பெறப்படும் 500 மில்லியன் டொலர் மதிப்பிலான முக்கிய இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நேடோ கூட்டாளிகளுடன் இணைந்து கனடா செயல்படும் எனவும் இதில் கனடாவின் பங்கு 200 மில்லியன் டொலர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு தொடர்ந்த ஆதரவு வழங்கப்படும் எனவும் இத்தகைய உதவி ரஷ்யா தாக்குதலுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top