News

உடைப்பெடுத்தது மாவிலாறு : மூதூரைத் தொடர்ந்து மூழ்கும் கிண்ணியா!

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, குறித்த கரையோரங்களை அண்டிய பகுதிகளின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பயணம் செய்ய முயற்சிப்பதை தவிர்க்குமாறும் அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் படகு சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 13 இடங்களில் உடைப்பெடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

மாவிலாறு குளக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அண்டிய தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெருகல், கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட பல தாழ் நிலப் பகுதிகளும் வெள்ள அபாயத்தின் கீழ் உள்ளன.

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமானம் மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்கள் சீனா பே விமான படை தளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர்.

இதேவேளை மேலும் 22 பேர் விமானம் மூலம் மீட்க பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது தெரிவித்தார்.

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை மூதுர் நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மாவலி கங்கையின் பெருக்கெடுப்பும் மாவிலாற்றின் உடைப்பும் குளங்களின் வான் திறப்பும் கிராமங்களில் உட் புகுந்து மக்களின் இயல்பு வாழ்வைப் பெருமளவு பாதித்துள்ளது.

திருகோணமலை மூதூர் பிரதான தரைவழிப் பாதை உடைப்பெடுத்துள்ளது.வயல் வெளிகள் யாவுமே கடல்போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

மஹாவலி கங்கையின் ஆற்றுப்படுகையில் தாங்க முடியாத அளவுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதாலும் அந்த பகுதியில் பெய்த மழையினாலும் இவ்வாறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top