கனடாவில் நடந்த தாக்குதலில் பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்கிழக்கு எட்மண்டனில், பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்கள், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் பஞ்சாபின் மான்சாவில் உள்ள உத்தத் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் ரன்வீர் சிங் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழில் வாய்ப்புகளைத் தேடி இரண்டு இளைஞர்களும் தனித்தனியாக கனடாவுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் அங்கு வேலை தேடி வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
எட்மண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். கனடா போலீசார் வேறு சில பஞ்சாப் இளைஞர்களை சுற்றி வளைத்து இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
