News

 கனடாவின் விவசாய பொருட்கள் மீது புதிய வரி விதிப்பு: மிரட்டல் விடுத்த டிரம்ப்

இந்தியா மற்றும் கனடா மீது புதிய வரி விதிப்புகளை மேற்கொள்ள போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

வர்த்தக பேச்சுவார்த்தையில் மந்தநிலையில் நீடிப்பதை தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா மீதான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதில் குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி போன்ற விவசாய பொருட்களும், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களும் முக்கிய இடம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் பல பில்லியன் டொலர் நிவாரணத் திட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிமுகப்படுத்தும் போது டிரம்ப் இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டார்.

அதில் குறிப்பாக இந்தியா மற்றும் ஆசிய பங்காளிகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான தனது விமர்சனத்தை டிரம்ப் தீவிரப்படுத்தினார்.

இறக்குமதி பொருட்கள் மீது வரிவிதிப்புகளை தீவிரப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் சிக்கல்களை தீர்க்க முடியும் என்று தீர்க்கமாக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வசூலிக்கப்படும் வரிகளில் இருந்து சுமார் $12 பில்லியன் தொகையை அமெரிக்கா விவசாயிகளுக்கான பொருளாதார உதவியாக வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாயிகள் இன்றியமையாத தேசிய சொத்து என்றும், அமெரிக்காவின் முதுகெலும்பின் ஒரு பகுதி என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top