News

சீனாவில் மீண்டும் சோகம்! தீ விபத்தில் 12 பேர் பலி..

சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்திலுள்ள அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டத்தில் 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் பற்றி மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140ற்கும் மேற்பட்டோர் பலியாகி 75 ஆண்டுகளில் இல்லாத அழிவை அந்தநகரம் சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top