சூடானில் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பலியானார்கள்.
சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உளு்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்று இரவு ட்ரோன் ஏவியது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
ஆயுத குழுவினர்,முதலில் மழலையர் பள்ளியைத் தாக்கியது, பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியது. 50 பேர் இதில் கொல்லப்பட்டனர். குழந்தைகள் 33 பேர் அடங்குவர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு மருத்துவர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
