News

சூடான் ராணுவ தாக்குதல்களில் 2 வாரங்களில் 100 பேர் பலி

 

சூடானின் உள்நாட்டு போர் பாதித்த கோர்டோபான் மாகாணத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களால், 43 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், அதிகாரப் போட்டி காரணமாக ராணுவத்திற்கும், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவத்திற்கும் இடையே, 2023ம் ஆண்டு முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த உள்நாட்டுப் போரில், 40,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர், புலம் பெயர்ந்துள்ளனர். தற்போது கோர்டோபான் மாகாணம் போரின் மையமாக மாறி உள்ளது.

இந்தப் பகுதியை, துணை ராணுவப் படை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராணுவம் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில், மருத்துவமனைகள், மழலையர் பள்ளி மற்றும் ஐ.நா., தளங்களை குறிவைத்து, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 43 குழந்தைகள் உட்பட 104 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா., சபை கூறியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top