News

ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை வேவு பார்த்த டிரோன்கள்;

அயர்லாந்து சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை ஐந்து ட்ரோன்கள் ரகசியமாக கண்காணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அயர்லாந்தின் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேட்டோ எனப்படும் சர்வதேச நாடுகளின் இராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரியில் போரை ஆரம்பித்தது.

நான்கு ஆண்டுகளை நெருங்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில், 28 அம்சங்களைக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிந்தும் போர் முடியவடையவில்லை.

உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கோரிய நிலையில் இதனால் இந்த ஒப்பந்தத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இதனிடையே, அரசு முறை பயணமாக ஜெலன்ஸ்கி, விமானம் மூலமாக அயர்லாந்து சென்றிருந்தார்.

இதன்போது, அவரது விமானப் பாதையை ஐந்து ட்ரோன்கள் ரகசியமாக கண்கானித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அயர்லாந்து கடற்படை உறுதி செய்துள்ளதுடன் விமானப் பாதையை இடைமறிக்கும் முயற்சியாக இந்த ட்ரோன்களை அனுப்பியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக ஐரோப்பா நாடுகளை டிரோன்கள் அச்சுறுத்தி வந்த நிலையில், இது ரஷ்யாவின் வேலையாகத்தான் இருக்கும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழலில் ஜெலன்ஸ்கி அர்லாந்து சென்ற நிலையில், அங்கும் ட்ரோன்கள் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top