News

ஜேர்மனியில் கடும் எதிர்ப்புகளை மீறி..இராணுவ மசோதா நிறைவேற்றம்

 

ஜேர்மனியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய இராணுவ சேவை என்ற மசோதா நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பது தொடர்பிலான மசோதா குறித்து ஜேர்மனி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ரஷ்யாவின் ஐரோப்பிய ஊடுருவலால் பல நாடுகள் கலக்கமடைந்த நிலையில்தான், ஜேர்மனி தமது இராணுவத்தைப் பலப்படுத்த இதனை கையில் எடுத்தது.

வாக்கெடுப்பில் ஆதரவான வாக்குகள் அதிகம் கிடைத்தன. ஆனால், அரசின் இந்த மசோதாவிற்கு ஜேர்மனியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகர் பெர்லினில் சுமார் 3000 பேர் போராட்டத்தில் இறங்கினர்.

military bill passed in germany

இந்த நிலையில், கடும் எதிர்ப்பையும் மீறி ஜேர்மனி நாடாளுமன்றத்தில் இந்த இராணுவ மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய இராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஜேர்மனி இராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top