News

நேட்டோவில் உறுப்பினராகும் கோரிக்கையை கைவிட தயார்

 

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அங்கம் வகிக்கும் இராணுவ ஒத்துழைப்பு அமைப்பான நேட்டோவில் இணைய முயன்றது. இதற்கு, அண்டை நாடான ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்டதோடு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறி, ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், அந்த முடிவில் இருந்து உக்ரைன் பின்வாங்காததால், இருநாடுகள் இடையே போரை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சுக்காக, ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு சென்றுள்ள ஸெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்கொப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் ஐந்து மணித்தியாலயங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.அதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது வேண்டுமென்றே ரஷ்யா தாக்குதலை தொடர்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போர் இது. நேட்டோ உறுப்பினராக இணைய உக்ரைன் பல ஆண்டுகளாக விரும்பியது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இதை முழுமையாக ஆதரிக்கவில்லை. அதனால் நேட்டோ உறுப்பினராவதை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறோம். அதற்கு ஈடாக மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறேன்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top