News

பதுளையில் தேடுதல் பணிகளுக்கு இறங்கிய இந்திய மீட்பு படையினர்!

இலங்கையில் தொடர்ந்தும் நிலவி வந்த அசாதாரண நிலையைத் தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக இந்தியாவிலிருந்து வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று (01.12.2025) பதுளைக்கு சென்றுள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து தேடல் மற்றும் மீட்புக் குழுவின் 20 உறுப்பினர்கள், இன்றைய தினம் (01.12.2025) பதுளை மாவட்டத்தில் தொடர்புடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

புஸ்ஸல்லாவை மலையில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியினை இந்திய மீட்பு படை இன்று (01.12.2025) ஆரம்பிக்கும் என பதுளை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த தினங்களாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் மத்திய மலைநாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் இயற்கை சீற்றத்துக்கு உள்ளாகியுள்ளன.

பலரும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்ததுடன் அதிகளவானோர் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலும் தெரியவில்லை.

இவ்வாறான பின்னணியில், இந்திய மீட்பு படையினரும் இணைந்து துரிதமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top