பிரான்சின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் சுற்றித்திரிந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு பிரான்சில் உள்ள (பினிஸ்டெர்)Finistere பகுதியில் அமைந்துள்ள இலே லாங்(Ile Longue) உள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தளத்தின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் சுற்றித் திரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பாராத பாதுகாப்புக் குழப்பத்தை பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறைந்த அணுசக்தி தளத்தின் மேல் வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தை அடுத்து விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு அதிகாரிகள் ட்ரோன் எதிர்ப்புத் தாக்குதலை மேற்கொண்டனர்.
ஆனால் இந்த நடவடிக்கையில் அத்துமீறிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டதா என்பதை அதிகாரிகள் இன்னும் தெளிவு படுத்தவில்லை.
