News

பிரான்ஸ் வந்தடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்துள்ளார்.

பிரான்ஸ் வந்துள்ள ஜெலன்ஸ்கியை, தலைநகர் பாரீஸிலுள்ள எலிசி மாளிகை வாசலுக்கு வந்து கட்டியணைத்து வரவேற்றார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

பிரான்ஸ் வந்தடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி | Zelenskyy Meet Macron At France

விரைவில் இருவரும் இணைந்து ஊடகவியலாளர்களை சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பாரீஸிலேயே பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Jean-Noël Barrotம் உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Andrii Sybihaவும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள்.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, Barrot வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் டோன்பாஸும் கிரீமியாவும் உக்ரைன் எல்லைக்குட்பட்டவைதான் என்றும், உக்ரைன் உக்ரைனியர்களுக்கு மட்டுமே உரியது என்றும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top