Canada

புலம்பெயர் மருந்துவர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை

கனடாவிலுள்ள வெளிநாட்டு மருத்துவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

கனடா முழுவதும் கடுமையாக காணப்படும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் தற்காலிக குடியிருப்பாளர்களாக பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்த விடயத்தை குடியேற்ற அமைச்சர் லீனா தியாப் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், 5000 வெளிநாட்டு மருத்துவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் மற்றும் இவர்கள் தற்போதைய குடியேற்ற அளவுக்கு மேல் சேர்க்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் குடும்ப மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், ஆய்வக மற்றும் கிளினிக்கல் மருத்துவ நிபுணர்கள் போன்ற வெளிநாட்டவர்கள் நன்மை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்கள் உரிமம் பெற்ற மருத்துவர்களை (Express Entry) வழியாக பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களின் வேலை அனுமதி 14 நாட்களில் செயல்படுத்தப்படும் எனவும் நிரந்தர குடியுரிமை செயல்முறையுடன் இணைந்து மருத்துவருக்கு உடனடியாக பணியாற்ற வசதி செய்து கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top