News

வடஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு

 

வடஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை மையமும், எந்த சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top