வடகரோலினாவில் உள்ள பிராந்திய விமான நிலையத்தில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் பலர் பலியாகி இருக்கு கூடும் என கூறப்படுகிறது.
இது குறித்து பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது: சார்லட் நகருக்கு வடக்கே 45 மைல் தொலைவில் உள்ள ஸ்டேட்ஸ்வில் பிராந்திய விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான விமானம் சி550 வகையை சேர்ந்தது இந்த விமானத்தில்ஆறு பேர் இருந்தனர் என தெரிவித்து உள்ளது.
விபத்து குறித்து ஐரெடெல் ஷெரிப் டேரன் கேம்ப்பெல் விமான விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என கூறி உள்ளார். அதே நேரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் எப்ஏஏ ஆகியவை இணைந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. விபத்து நடந்த நேரத்தில் லேசான தூறல் மற்றும் மேக மூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.
