News

 இலங்கையில் தொடரும் அனர்த்தங்கள்! 330ஐ கடந்த பலி எண்ணிக்கை

 

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, காணாமல் போனோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, கண்டியில் 88 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  150 பேர் காணாமல் போயுள்ளனர்.

பதுளையில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் காணாமல் போயுள்ளனர்.

நுவரெலியாவில் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், 64 பேர் காணாமல் போயுள்ளனர்.

குருநாகல் பகுதியில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாத்தளை பகுதியில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

கேகலை பகுதியில், 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், மொனராகலை, கொழும்பு, மட்டக்களப்பு, அநுரதாபுரம், முல்லைத்தீவு, அம்பாறை, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, காலி, கம்பஹா, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 35 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் காணாமல் போயுள்ளனர். கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 20 உயிரிழந்துள்ளடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், மொனராகலை, கொழும்பு, கேகாலை, அம்பாறை, யாழ்ப்பாணம், நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காலி, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலும் 35 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

குறித்த அறிக்கையின் படி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,68,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நாடு முழுவதும் 1,094 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 1,47,931 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் அதிகாரிகளால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top