ஆம்ஸ்டர்டாமின் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள வோண்டெல் தேவாலயம், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் எரிந்து நாசமானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த கத்தோலிக்க தேவாலயத்தின் சுமார் 50 மீட்டர் உயர (164 அடி) கோபுரமும் கூரையும் தீயில் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது 154 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பை இனி மீட்க முடியாததாக மாற்றியுள்ளது.
இந்த நினைவுச்சின்ன தேவாலயத்தில், இது மிகவும் கடுமையான மற்றும் பயங்கரமான தீ விபத்து என்று ஆம்ஸ்டர்டாம் மேயர் ஃபெம்கே ஹால்செமா கவலை வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவுக்குப் பிறகு முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அது விரைவாக ஒரு பெரிய சேதத்தை விளைவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் நெதர்லாந்தின் பிற பகுதிகளிலிருந்து உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்க கடற்படை அதன் 60 மீட்டர் உயர வான்வழி பணி தளத்தை பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, பலத்த காற்று தீயை எவ்வாறு தூண்டியது என்பதை உள்ளூர் ஊடகங்கள் விவரித்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள ஏராளமான குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், வாணவேடிக்கை நிகழ்வுக்கு பிறகு, தீப்பிடித்ததால், நகரின் புத்தாண்டு தின வாணவேடிக்கைகளும் இதில் பங்கு வகித்திருக்கலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனையைத் தடை செய்தது. ஆனால் பல சட்டவிரோதமானவை இன்னும் நகரம் முழுவதும் குடியிருப்பாளர்களால் வெடிக்கப்பட்டன.

வோண்டல் தேவாலயம் ஒரு நியோ-கோதிக் கட்டிடமாகும். இது புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பியர் குய்பர்ஸால் வடிவமைக்கப்பட்டது.
அவர் ரிஜ்க்ஸ்மியூசியம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் மத்திய நிலையத்திற்கும் பொறுப்பானவர்.
1977 ஆம் ஆண்டு முதல் அந்தக் கட்டிடம் வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தப்படவில்லை. மேலும் அது ஒரு நிகழ்வு இடமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைத்த பல சம்பவங்களில் தேவாலய தீ விபத்தும் ஒன்றாகும்.
கடந்த கால நெதர்லாந்தில் பட்டாசு விபத்துகளில் 17 வயது சிறுவன் ஒருவனும் 38 வயது ஆண் ஒருவனும் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ரோட்டர்டாமில் உள்ள கண் மருத்துவமனை, கண் காயங்களுக்கு 10 சிறார்கள் உட்பட 14 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.
நுகர்வோருக்கு பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையே விற்பனை அதிகரிப்புக்குக் காரணம் என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் டச்சு வானவேடிக்கை சங்கம் குற்றம் சாட்டியது.
புத்தாண்டு தினத்தன்று வாணவேடிக்கைகளுக்காக, மகிழ்ச்சியாளர்கள் 151 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
மாலை மற்றும் இரவில் “காவல்துறை மற்றும் அவசர சேவைகளுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவு வன்முறை” நடந்ததாக டச்சு காவல்துறை விவரித்துள்ளது.
இந்நிலையில் பிரேடா போன்ற இடங்களில் அதிகாரிகள் பட்டாசுகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளால் கூட தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
