News

ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம்; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்

 

ஈரானில் சுமார் ஒரு மாதமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த போராட்டக்காரர்களை அரசு இரும்புக்கரம் கொண்டும் ஒடுக்கி வருகிறது.

இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில் சுமார் 6 ஆயிரம் பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு கூட்டாக மரண தண்டனை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஈரானும், அமெரிக்கா தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்தது. இந்த நிலையில் ஈரானை நோக்கி அமெரிக்கா தனது படைகளை நகர்த்தி வருகிறது. அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கள் மற்றும் பிற போர்க்கப்பல்கள் ஈரானை நோக்கி விரைகின்றன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். செங்கடலில் ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம் என மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் அங்கு போர்பதற்றம் அதிகரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top