News

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்!

 

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு ‘சீனாவுக்கு ஆதரவாக’ செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.

பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top