கனடாவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான அனுஷா ராஜகாந் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை காலை 9 மணியளவில் Islington Avenue மற்றும் Dixon Road சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அனுஷா நடைபாதையில் வீதியை கடந்து செல்கையில், அவர் மீது வாகனம் மோதியுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
