News

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200இற்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கோல்டானின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் ரூபாயா சுரங்கத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

உலகின் கோல்டன் கனிமத் தேவையில் சுமார் 15வீதம் ரூபாயா சுரங்கம் உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த சுரங்கம் 2024 முதல் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top