News

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு

 

காஷ்மீரில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டோடா பகுதியில் 17 இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றது.

அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன் காரணமாக அந்த வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட இராணுவ வீரர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 7 பேர் படுகாயமடைய அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், உயிரிழந்த 10 இராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top