ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.
இதில் காவல்துறைக்கும் போராடகர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்க டிரம்ப், “போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும்” என்று ஏற்றிவிட்டார்.
தங்கள் நாட்டு விவகாரத்தில் டிரம்ப் தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு எச்சரித்தது.
