டிட்வாவை தொடர்ந்து இலங்கைக்கு ஊடுறுவிய அமெரிக்காவின் நோக்கம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் ட்ரம்ப் வெனிசுலாவை கைப்பற்றிய பின்னர் சந்தேகம் அதிகரித்துள்ளது எனலாம்.
அதேநேரம், யுத்த தருவாயில் தனது கடற்படை மற்றும் வான்படை நகர்வுகளை உறுதிப்படுத்த, உலகின் சிறந்த இயற்கை துறைமுகமான திருகோணமலையைத் தனது முழுமையான வசத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா திட்டமிடுவதாக கூறப்படுகின்றது.
தாய்வான் போரின் போது சீனாவின் விநியோகப் பாதைகளை முடக்கவும் மற்றும் தனது போர்க்கப்பல்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாகவும் திருகோணமலையைப் பயன்படுத்துவதே அமெரிக்காவின் முக்கிய இலக்கு எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இந்நகர்வு அநுர அரசாங்கத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
