ரஷியா- உக்ரைன் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை (அணுஆயுதம் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது) மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளார்.
ஒரேஷ்னிக் ஏவுகணையுடன் நூற்றுக்கணக்கான டிரோன்கள், 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷியா இடையில் சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்வதற்கு கத்தார் முக்கிய பங்காற்றியது.
கடந்த ஆண்டு இறுதியில் ஒரேஷ்னிக் ஏவுகணையை உக்ரைன் பகுதியில் செலுத்தில் பரிசோதித்தது. கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்ததாக தெரிவித்தது. இந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
