News

வெனிசுலாவை தொடர்ந்து கொலம்பியாவை குறி வைக்கும் டிரம்ப்: அதிபருக்கு பகிரங்க எச்சரிக்கை

 

வெனிசுலாவை தொடர்ந்து கொலம்பியா அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா ஊக்குவிக்கிறது என்ற அமெரிக்காவின் நீண்ட நாட்கள் குற்றச்சாட்டு, அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்யும் அளவுக்கு கொண்டு போய் இருக்கிறது. முடிந்தால் என்னை பிடித்துக் கொண்டு போ என்று டிரம்புக்கு நிக்கோலஸ் மதுரோ முறுக்கை காட்ட, சொல்லியபடியே கராகஸ் நகருக்குள் புகுந்த அமெரிக்க படைகள் மதுரோ மற்றும் அவரின் மனைவியை அள்ளிக் கொண்டு போய் இருக்கிறது.

நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்த தங்கள் படையினர், அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந் நிலையில் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்ததன் எதிரொலியாக அண்டை நாடான கொலம்பியாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை வழியாக வெனிசுலா மக்கள் வர வாய்ப்புள்ளதால் கொலம்பியாவின் எல்லையில் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர்.

அதே நேரத்தில், வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கியூபா, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை கடுமையாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அங்கு குறைந்தது 3 பெரிய கோகைய்ன் தொழிற்சாலைகள் இருக்கின்றன, அவர் கோகைய்ன் தயாரிக்கிறார். அதை அவர் அமெரிக்காவுக்கு அனுப்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top