News

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 21 பேர் பலி, 73 பேர் காயம்.

 

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது.

அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

குறித்த விபத்தில் சுமார் 73 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் ஸ்பெயினின் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top