கனடா அரசு, 2026 முதல் சர்வதேச மாணவர்களின் வேலை நேரத்தை குறைக்கும் புதிய விதிகளை அறிவித்துள்ளது.இதனால் இந்திய மாணவர்களும் நேரடியாக பாதிக்கப்பட உள்ளனர்.
வாரத்திற்கு 24 மணி நேரம் மட்டுமே மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டும்.
முன்பு 20 மணி நேரமாக இருந்த வரம்பு, கோவிட் காலத்தில் தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டது. இப்போது 24 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை, ரீடிங் வீக் போன்ற கல்வி இடைவெளிகளில் மாணவர்கள் வரம்பில்லாமல் வேலை செய்யலாம்.
அதேபோல், கல்லூரி வளாகத்திற்குள் வேலை செய்வதற்கு எந்த நேர வரம்பும் இல்லை.
செல்லுபடியாகும் Study Permit கொண்டிருக்க வேண்டும்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழுநேர படிப்பு இருக்க வேண்டும்.
படிப்பு குறைந்தது 6 மாதங்கள் நீடிக்க வேண்டும் மற்றும் டிப்ளோமா, டிகிரி அல்லது சான்றிதழ் வழங்கும் வகையில் இருக்க வேண்டும்.
வேலை செய்யும் முன் Social Insurance Number (SIN) பெற வேண்டும்.
மாணவர்கள் கல்வியை விட வேலைக்கு முக்கியத்துவம் தருவதாக அரசு கவலைப்படுகின்றது.
உள்ளூர் வேலை சந்தையில் அழுத்தம் அதிகரித்ததால், கல்வியே முக்கிய நோக்கம் என்பதை உறுதி செய்ய விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
விதிகளை மீறினால், விசா ரத்து, எதிர்கால புலம்பெயர்வு விண்ணப்பங்கள் நிராகரிப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும்.
கனடாவில் அதிகமான சர்வதேச மாணவர்கள் இந்தியர்களே. உயர்ந்த கட்டணங்கள் மற்றும் விலைவாசியை சமாளிக்க பகுதி நேர வேலை அவசியமாகிறது.
புதிய விதிகள், மாணவர்கள் வேலை நேரத்தை குறைத்தாலும், கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
