News

அப்பாவி மக்கள் கொலை… மியூனிக்கில் ஈரானுக்கு எதிராக திரண்ட 200,000 பேர்கள்

மியூனிக்கில் பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் கூடியிருக்கும் நிலையில், ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக சுமார் 200,000 பேர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனவரி மாதம் விலைவாசி உயர்வுக்கு எதிராக தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்டம், நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களாக வெடித்த நிலையில், ஈரான் அரசாங்கம் கொடிய அடக்குமுறையை கட்டவிழ்த்தது.

அப்பாவி மக்கள் கொலை... மியூனிக்கில் ஈரானுக்கு எதிராக திரண்ட 200,000 பேர்கள் | Munich 200000 Join Iran Demonstration

 

இந்த நிலையில் ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் தலைமையைக் கண்டித்து, மியூனிக்கின் தெரேசியன்வீஸ் கண்காட்சி மைதானத்தில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். சிலர் 1979ல் முடியாட்சி அகற்றப்பட்ட சின்னத்தை கொடிகளாக ஏந்தியிருந்தனர்.

ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன. மட்டுமின்றி, பல ஆயிரம் பேர்கள் கொல்லப்படும் நிலைக்கு மேற்கத்திய நாடுகள் ஈரானை நெருக்கடிக்கு தள்ளியதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சனிக்கிழமை ரொறன்ரோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் ஈரானுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கக் கோரும் பேரணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஈரானின் முன்னாள் மன்னரின் நாடுகடத்தப்பட்ட மகனான ரேசா பஹ்லவி சனிக்கிழமை மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். அதில், ஈரானிய மக்களுக்கு உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் கேட்டுக்கொண்டார்.

அப்பாவி மக்கள் கொலை... மியூனிக்கில் ஈரானுக்கு எதிராக திரண்ட 200,000 பேர்கள் | Munich 200000 Join Iran Demonstration

 

கடந்த 1979ல் மக்கள் புரட்சியில் தனது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் பஹ்லவி, ஈரானில் மேலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வெளிநாட்டு மனிதாபிமான தலையீட்டை வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மனியில் ஆண்டு தோறும் Oktoberfest முன்னெடுக்கப்படும் தெரேசியன்வீஸ் மைதானமானது பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெறும் அரங்கத்தில் இருந்து வெறும் 3 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது.

கடந்த வாரம் MEK குழுவின் அழைப்பை ஏற்று பெர்லினில் 10,000 பேர்கள் திரண்டு ஈரானுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடுகடத்தப்பட்ட இந்த

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top