கடந்த வாரம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்திருந்தார்.
இந்த அவசர அவசரமான சந்திப்பானது, சர்வதேச ரீதியில் ஊடக பரப்பில் பல்வேறு யூகங்களை எழுப்பி வருகின்றது.
ஈரானை தாக்குவதில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி விட்டதாகவும், அதனால், இஸ்ரேல் நேரடியாக ஈரானை தாக்க போவதை ட்ரம்பிடம் தெரிவித்து விட்டு செல்வதற்காகவுமே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகின்றது.
இது சர்வதேச ரீதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
