News

எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: முன்னாள் பிரித்தானிய தூதுவர் கைது

அமெரிக்காவிற்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மன்டல்சனை, பிரத்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொது பதவியில் தவறான நடத்தை (misconduct in public office) குற்றச்சாட்டின் பேரில் இன்றைய தினம் மன்டல்சன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

72 வயதான மண்டெல்சன், லண்டன் காம்டன் பகுதியில் உள்ள முகவரியில் இ்ன்றைய தினம் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக லண்டன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கு முன் வில்ட்ஷையர் மற்றும் காம்டன் பகுதிகளில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய தொழிற் கட்சியின் மூத்த அரசியல்வாதியாக இருந்த மண்டெல்சன், பிரித்தானிய அரசில் வர்த்தக செயலாளராக இருந்த காலத்தில், சந்தை தொடர்பான நுணுக்கமான தகவல்களை தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுக்கு பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

எப்ஸ்டீன் கோப்புகளின் சமீபத்திய வெளியீட்டில் வெளிவந்த தகவல்களின் பின்னர், மண்டெல்சன் இந்த மாத தொடக்கத்தில் தொழிற்கட்சியிலிருந்து விலகினார்.

முன்னதாக வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களில், எப்ஸ்டீனின் 50வது பிறந்தநாளுக்காக எழுதிய கைஎழுத்து குறிப்பில் அவரை “என் நெருங்கிய நண்பர்” என குறிப்பிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்ட்ராமர் கடந்த செப்டம்பரில் மண்டெல்சனை தூதுவர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம், ஸ்டார்மர் தலைமையிலான அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top