News

கிரீன்லாந்தில் கனடா தூதரகம்: ட்ரம்ப் முயற்சிக்கு எதிராக புதிய நடவடிக்கை

 

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை (Consulate) திறக்க உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சிக்கு எதிரான முக்கியமான அரசியல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்த தூதரகம், கிரீன்லாந்தின் தலைநகரான நூக் (Nuuk) நகரத்தில் திறக்கப்படுகிறது. கடந்த ஒரு வ்ருடமாகவே இந்த திட்டம் தயாராகி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் கலந்து கொண்டார்.

அவர், “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுவது முக்கியம்” என்று கூறினார்.

நூக் நகர மேயர் அவாராக் ஒல்சன், “இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக உள்ளது. ட்ரம்ப் கூறிய கருத்துகள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் கனடா போன்ற நாடுகள் எங்களுடன் இருப்பது நம்பிக்கையை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதியாக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியுள்ளார். அவர், “அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம்” என்று கூறியுள்ளார். இதனால், டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் பிற NATO நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சமீபத்திய கருத்துக்கணிப்புகள், 58 சதவீத அமெரிக்கர்கள் ட்ரம்ப் திட்டத்திற்கு எதிராக உள்ளனர். அதேபோல், 85 சதவீத கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top