News

சர்வதேச போதைப்பொருள் குற்றக்கும்பல் தலைவர் படுகொலை.. வட அமெரிக்காவில் வெடிக்கும் வன்முறை

மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கும்பல் ஒன்றின் தலைவரான நெமேசியோ ஒசேகேரா செர்வான்டஸ் (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, ஏர் கனடா, யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் ஜாலிஸ்கோவிற்கான விமானங்களை இரத்து செய்துள்ளன.

எல் மேன்சோ என அறியப்பட்ட 59 வயதுடைய நெமேசியோ ஒசேகேரா செர்வான்டஸ், போதைப்பொருள் கும்பலின் தலைவராக இருந்தார்.

அவரை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது, அவரது ஆதரவாளர்கள் மற்றும் படையினருக்கு இடையிலான மோதலில் கடுமையாக காயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்ததாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜாலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா நகரில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் குறித்த அமைப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டதுடன், மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

 

 

எல் மேன்சோவின் மரணத்திற்கு பதிலடி அளிக்கும் வகையில் குறைந்தது, 12 மாநிலங்களுக்கு வன்முறை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top