கனடா பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 8 பேரின் அடையாளம் வெளியிடபட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் Tumbler Ridge பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 8 பேரின் பெயர்களை கனடா ராயல் மவுண்டட் பொலிஸ் (RCMP) வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் Tumbler Ridge Secondary School-ல் நடந்தது. பாடசாலைக்குள் உயிரிழந்தவர்கள்:
Abel Mwansa (12)
Ezekiel Schofield (13)
Kylie Smith (12)
Zoey Benoit (12)
Ticaria Lampert (12)
Shannda Aviugana-Durand (39)- ஆசிரியர்

மேலும், Fellers Avenue பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்தவர்கள்:
Emmett Jacobs (11) – துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தம்பி
Jennifer Jacobs (39) – துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தாய்
இந்த சம்பவம் கனடா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்திய நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரிட்டிஷ் கொலம்பியா மாநில சட்டமன்றத்தில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில லெப்டினன்ட் கவர்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, நாளை நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் உற்சாகமான, கனவுகளுடன் வாழ்ந்த குழந்தைகள் என பெற்றோர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். இந்த சம்பவம், சிறிய சமூகமாக இருந்த Tumbler Ridge-ஐ பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
