லிமாவில் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தென் அமெரிக்க நாடான பெருவின் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று அரேகுய்பா பகுதியில் பயணித்துள்ளது.
அதில், நான்கு ஊழியர்கள் உட்பட 15 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், திடீரெனக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த உலங்கு வானூர்தி தரையில் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில், உலங்கு வானூர்தியில் பயணித்த 15 பேரும் உயிரிழந்ததாகப் பெரு இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
