News

யாழில் நேராக சிறுவனின் மூளையை துளைத்த தோட்டா – விரையும் மனித உரிமை ஆணைக்குழு

 

யாழ்ப்பாணம் (Jaffna) – அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (10) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களநிலவரங்களை நேரில் ஆராய்ந்ததுடன், காவல்துறையினரிடமும் தகவல்களை கோரி பெற்றுள்ளனர்.

அதேவேளை குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுள்னர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top