News

ரஷியா, உக்ரைன் இடையே அடுத்த வாரம் பேச்சுவார்த்தை; போர் முடிவுக்கு வருமா…?

 

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 450வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

போர் நிறுத்தம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளாததால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா முயற்சியால் மீண்டும் ரஷியா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் அடுத்த வாரம் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன், ரஷியா இடையேயான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, போரை ஜுன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கெடு நிர்ணயித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top