News

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் அலி லாரிஜானி ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதை, அந்த மன்றம் உறுதிப்படுத்தியதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அலி லாரிஜானி கொல்லப்பட்டதை இன்று அதிகாலை  ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமையான நேற்று(17.03.2026) அதிகாலையில் லாரிஜானி, அவரது மகன் மொர்டெசா லாரிஜானி, சபையின் செயலகமான அலிரெசா பயாத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைத் தலைவர் மற்றும் பலருடன் உயிரிழந்ததாக சபை ஓர் அறிக்கையில் தெரிவித்ததாக ஊடகங்கள் அடிகோடிட்டுள்ளன.

ஈரானின் வளர்ச்சிக்கு லாரிஜானி ஆற்றிய நீண்ட கால சேவையைப் பாராட்டிய அக்குழு, வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான் | Iran Responds To Death Of Ali Larijani

மேலும் பதிலடி தாக்குதல்கள் விரைவில் எதிரிகளை நிலைகுலைய செய்யும் என்றும் தெரிவித்ததாக குறிப்படப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தொடர் தாக்குதல்களில் லாரிஜானியை இஸ்ரேல் கொன்றுவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாயன்று தெரிவித்தார்.

இதற்கிடையில், பசிஜ் தன்னார்வப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்ததை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top