இந்த தாக்குதலை அடுத்து அபாயகரமான கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நியோட் ஹோவாவ் தொழிற்பேட்டை, பீர்ஷேபா நகருக்குத் தெற்கே 9 கி.மீ (6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததாக அவசரகால சேவை தெரிவித்துள்ளது.
ஆலையில் அபாயகரமான பொருட்கள் இருப்பதால், நியோட் ஹோவாவ் பகுதி மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் மற்றும் தங்கள் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
