நேற்று நடந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட டிரம்ப் அவரது மரணம் ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்
மேலும் குண்டுவெடிப்பு தடையின்றி தொடரும் என்று டிரம்ப் மேலும் கூறினார்.
தெஹ்ரானில் உள்ள அவரது வளாகத்திற்கு அருகே தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் காமேனியின் மரணத்தை இஸ்ரேல் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேல் அதிகரிக்கள் கூறினர். காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தெரிவித்தார்.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு கமேனியின் உடல் மீட்கப்பட்டதாக ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக ஈரானின் அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக கமேனியின் மருமகன் மற்றும் மருமகள் இறந்ததாக ஈரானிய ஊடகங்களும் உறுதிப்படுத்தின.
ஆனால் ஈரான் தலைவர் காமேனி உயிரிழப்பை ஈரான் மறுத்துள்ளது. ஈரானிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், காமேனியும் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, “எனக்குத் தெரிந்தவரை காமேனி உயிருடன் இருக்கிறார்” என்று NBC செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
காமேனியுடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்கில்”ஹைதரின் பெயரால்” (In the name of Haider) என்ற ஒரு மர்மமான பதிவு வெளியிடப்பட்டது.
இது காமேனி உயிருடன் இருப்பதைக் குறிப்பதாகச் சிலர் கருதுகின்றனர். “ஹைதர்” என்பது தைரியம் மற்றும் வெற்றியைக் குறிக்க ஈரானியத் தலைவர்களால் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
மேலும் உச்சத் தலைவரின் அலுவலகத்தின் மக்கள் தொடர்புத் தலைவர் காமேனியை கொன்றுவிட்டதாக கூறி, ” இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் மனதளவிலான போரை நடத்துவதாக குற்றம்சாட்டியதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
