Canada

கனடாவில் ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க இருக்கும் குறைந்தபட்ச ஊதியம்

ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது.

கனடாவில் நடைமுறையில் உள்ள 17.75 டொலர் என்ற ஊதிய அளவு, தற்போது குறைந்தபட்ச ஊதியத்தை 18.15 டொலர்களாக அதிகரிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் அரசு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த முடிவு செய்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் பணியாளர்கள் இந்த ஊதிய உயர்வைப் பெற இருக்கிறார்கள்.

ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு இடத்துக்கு இடம் மாறுபடும். அதிகபட்சமாக Nunavutஇல் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, 19.75 டொலர்களாகவும், குறைந்தபட்சமாக ஆல்பர்ட்டாவில் 15 டொலர்களாகவும் இருக்கும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top