ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவும்(வயது78)( Mansoureh Khojaste Bagherzadeh) கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது மகள்,மருமகன்,பேரக்குழந்தை ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் கமேனியின் மனைவி படுகாயமடைந்திருந்தார்.

பாகர்சாதே கோமாவில் இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கமேனியின் மகள், பேத்தி, மருமகள் மற்றும் மருமகன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன
