News

புதிய உச்ச தலைவரைத் தொட்டால் அமெரிக்காவிற்குப் பேரிடி : ஈரான் தூதுவர் கடும் எச்சரிக்கை

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மற்றும் தற்போதைய புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனியை அமெரிக்கா இலக்கு வைத்தால், அதற்கான விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று ரஷ்யாவிற்கான ஈரான் தூதுவர் காசிம் ஜலாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் (Sputnik) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அலி கமேனியின் படுகொலைக்கு ஈரானிய மக்கள் “இரத்தத்திற்கு இரத்தம்” என்ற ரீதியில் பழிவாங்கத் துடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர், சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்கக் கோருகின்றனர் என்று கூறிய ஜலாலி, அமெரிக்கா ஏற்கனவே இதற்கான எதிர்விளைவுகளைச் சந்தித்து வருவதாகவும், வருங்காலத்தில் இன்னும் கடுமையான மற்றும் கொடூரமான பதிலடியை ஈரான் வழங்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஈரானின் புதிய தலைமையைப் பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், அமெரிக்காவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் போர்ச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top