News

போரை நிறுத்த ஈரான் விதித்துள்ள நிபந்தனை

தங்கள் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்படும் வரை போர் தொடரும் என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் உச்ச தலைவரின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி தெரிவிக்கையில்,

போரில் ஈரானுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு, எங்கள் மீதான தடைகள் நீக்கப்படும் வரை போர் தொடரும்.

மேலும் ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்பதற்கு சர்வதேச உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும்.

இது ஈரான் மக்கள், உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி மற்றும் ஆயுதப்படைகளின் முடிவு ஆகும். இவைகள் நிறைவேறும் வரை போரை ஈரான் முடிவுக்கு கொண்டு வராது.

எங்களின் உள்கட்டமைப்பைத் தாக்கினால், இனி அது கண்ணுக்குக் கண் என்ற பதிலடியாக இருக்காது. கண்ணுக்கு தலை, கை, கால் போன்ற தாக்குதலாகவே இருக்கும். அமெரிக்கா முடங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top