News

24 மணி நேரத்தில் 11 நாடுகளை திணறடித்த ஈரான்! ஆபத்தாக மாறும் அடுத்தடுத்த நிமிடங்கள்..

அமெரிக்க – இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனால் மத்திய கிழக்கு மட்டுமன்றி முழு உலகமுமே போர் பதற்றத்தில் உள்ளது.

அமெரிக்காவின் முக்கிய இராணுவதளங்கள் அரபுதேசங்களில் இருப்பதால் ஈரான் அந்த நாடுகளை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகின்றது. அரபுநாடுகளில் இருக்ககூடிய 17 இராணுவதளங்கள் குறிவைக்கப்பட்டு துல்லியமாக தாக்குப்பட்டுள்ளதாக ஈரான் கூறுகின்றது.

ஆனால் தாக்குதலை முறியடித்து விட்டோம் என்று அமெரிக்கா கூறுகின்றது. வளைக்குடா பகுதிகளில் உள்ள கப்பல்களையும் ஈரான் இலக்கு வைப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விமானதாங்கி கப்பலான USS abraham lincoln ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் உண்மைதன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

24 மணிநேரத்தில் இஸ்ரேல்,சவூதி, குவைத், கட்டார், லெபனான்,ஜோர்தான், ஈராக், பஹ்ரைன், ஓமான், சிரியா, சைப்பிரஸ், என 11 நாடுக்ள மீது ஈரான் நேரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

அடுத்து என்ன நடக்கபோகின்றது என்ற எதிர்ப்பார்ப்புடன் ஒவ்வொரு நிமிடங்களும் ஆபத்தாக மாறிவருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top