News

காலிமுகத்திடல் சம்பவம் – அமெரிக்க தூதுவர் கவலை

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலிமுகத் திடல் கோட்டாகோகமவில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.

தற்போது போராட்டக்காரர்களை தாக்கி அந்த இடத்தை விட்டு விரட்டியடித்த படையினர் ஜனாதிபதி செயலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top