News

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு கடுமையாக்கப்படும் நிபந்தனைகள்

 

கடனில் இருந்து விடுவிக்க தமது கொள்கைகளுடன் பொருந்தக்கூடிய இலங்கையின் செயற்பாடுகளுக்காக தாம் காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நொசாக்கி இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த செப்டெம்பர் முதலாம் திகதியன்று இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும், 2.9 பில்லியன் டொலர்களுக்கான பணியாளர் மட்ட இணக்கத்தை எட்டின.

இதன் அடிப்படையில், இலங்கைக்கு 48 மாதங்களில் செலுத்தக்கூடிய வகையில் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவியை மேற்கொள்ளும்.

எனினும் அதற்கு முன்னதாக ஏற்கனவே தமக்கு கடன் வழங்கியவர்களுடன் கடன் மீள்செலுத்துகை சீரமைப்புக்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.

எனவே இலங்கை இதனை நிறைவேற்றும் வரை, தாம் காத்திருப்பதாக நொசாக்கி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை அது சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆசிய முக்கிய நாடுகளுடனும், சர்வதேச கடன் வழங்குனர்களுடனும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட்டவுடன் தற்போதுள்ள பணியாளர் மட்ட உடன்பாடு, சர்வதேச நாணய நிதிய நிர்வாக குழுவுக்கு பாரப்படுத்தப்பட்டு இலங்கைக்கு கடனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் நொசாக்கி தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top